ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து உயிர்தப்பிய பெண்

ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து உயிர்தப்பிய பெண்

1 mins read
ca565010-b1db-40c1-9432-328047e5db4c
பேருந்து வேகமாகச் சென்றபோது திடீரென கீழே விழுந்த பெண் பயணி. - படம்: தமிழக ஊடகம்

கன்னியாகுமரி: பேருந்தின் சக்கரத்திற்கு அருகே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளையைச் சேர்ந்தவர் செல்லத்தங்கம். இவர் தக்கலை பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்ல, திற்பரப்பு பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

அவர் பேருந்திற்குள் படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்ததாகத் தெரிகிறது.

பத்பநாதபுரம் அருகே வளைவில் பேருந்து திரும்பியபோது, திடீரென அந்தப் பெண் கீழே விழுந்து தூக்கி வீசப்பட்டார்.

ஆயினும், அதிர்ஷ்டவசமாக பேருந்தின் பின்பக்க சக்கரத்திற்குள் சிக்காமல் செல்லத்தங்கம் நூலிழையில் உயிர் தப்பினார். இதைக்கண்ட சக பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.

கீழே விழுந்த வேகத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்