தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகங்களை முடக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

1 mins read
7390a2e7-0862-45da-954e-c46d396a6ed7
சமூக ஊடகங்களுக்கு ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: மக்களின் குறைகளை புரிந்துகொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் அதனை முடக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கூறுகையில், “சமூக ஊடகங்களுக்கு ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வரவேண்டியது அவசியம். அதற்காக, அவற்றை முடக்க நினைப்பது சரியல்ல.

“சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்து உள்ளது ஆரோக்கியமானது.

“மக்களின் குறைகளை புரிந்துகொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் அவற்றை முடக்கக்கூடாது. 77வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில், மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா,” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குறிப்புச் சொற்கள்