திமுகவுக்குத்தான் பாஜகவுடன் உறவு: சீமான் சாடல்

திமுகவுக்குத்தான் பாஜகவுடன் உறவு: சீமான் சாடல்

1 mins read
d6112623-bb32-4d6c-bb40-3e46551503d8
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கோப்புப்படம்: ஊடகம்

தருமபுரி: கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர், “நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என குற்றம் சாட்டிய சீமான், தமிழ்ப் புதல்வன் என்பதற்குப் பதிலாக திராவிடப் புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

“நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை. கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறவில்லை.

ஒரு தேர்தலில் 17 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். அடுத்த தேர்தலில் 30 லட்சம், இந்த தேர்தலில் 35 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.

திராவிடக் கட்சிகள் அப்படியில்லை. அவர்கள் காசு கொடுக்காமல் கூட்டத்தைக் கூட்டினால் கட்சியை நான் கலைத்துவிட்டு செல்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம்,” என்றும் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்