தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் விற்பனை செய்த17,000 கடைகள் மூடல்

1 mins read
690c605d-7974-4d74-afd6-68752102517b
போதைப் பொருளை விற்றதற்காக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவரத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: போதைப்பொருளை விற்றதற்காக 17,481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக ஈரோட்டில் அமைச்சர் மா. சுப்பிரணியன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.

“ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன. 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.பவானி அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளாது.

“தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 866, 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

“அக்கடைகளில் இருந்து ரூ.209,119,468 ரூபாய் மதிப்பிலான 286,681 கிலோ எடையுள்ள குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“மேலும், போதைப்பொருளை விற்பனை செய்ததாக 17,481 கடைகளுக்கு முத்திரை வைக்கப்பட்டதோடு, 332,813,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்