தமிழ்நாட்டில் 24,700 பேருக்கு வேலை: பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு

தமிழ்நாட்டில் 24,700 பேருக்கு வேலை: பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு

1 mins read
4687b46f-dfeb-4147-8f88-672cec163bb9
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் 24,700 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 16வது அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ரூ. 44,125 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

“ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 17ல் திறந்துவைக்கிறார்,” என்றார்.

தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

“முதலமைச்சர் எப்போது வெளிநாடுகளுக்குச் சென்றாலும், எத்தனை கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வருகின்றன என்பதைவிட எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்.

“முதலீடு செய்யப்படும் நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து அறிவிப்பார்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்