சென்னை: இந்தியாவின் 78வது சுதந்திர தினவிழா, வியாழக்கிழமை கோலாலகலமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடு முழுதும் அரசு விடுமுறை. பல தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நான்கு நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளித்துள்ளன.
நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்காதவர்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்து நான்கு நாள்களுக்குச் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதனால், உள்நாட்டு விமானச் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. சென்னை - தூத்துக்குடிக்குச் செல்ல வழக்கமாக ரூ.4,301ஆக இருந்தது. அது வியாழக்கிழமையன்று ரூ.10,000க்கு விற்கப்பட்டது.
சென்னை-மதுரை விமானக் கட்டணம் 4 ஆயிரத்து 63 ரூபாயில் இருந்து 11,716 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை- திருச்சி விமானக் கட்டணம் 2,382 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.


