கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாள்: நேர்த்திக்கடன் செலுத்திய கார்த்தி சிதம்பரம்

கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாள்: நேர்த்திக்கடன் செலுத்திய கார்த்தி சிதம்பரம்

படம்: தமிழக ஊடகம்

16 Aug 2024 - 8:15 pm

1 mins read

திருப்புவனம்: இவ்வாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக கார்த்தி சிதம்பரம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாட்டில் பிரசித்தி பெற்ற கருப்பணசாமி கோயில் உள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, வெற்றி பெற்றால் மாரநாடு கருப்பணசாமிக்கு நேர்த்திக் கடனாக அரிவாள் செய்து தருவதாக கார்த்தி சிதம்பரம் வேண்டுதல் வைத்திருந்தார்.

மக்களவைத் தேர்தலில் ஏறக்குறைய 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

அதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாரநாடு கருப்பணசாமி கோயிலில் 20 அடி நீள அரிவாளை கார்த்தி சிதம்பரம் நேர்த்திக்கடனாகச் செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்