சதுரகிரிக்குச் செல்ல அனுமதி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

சதுரகிரிக்குச் செல்ல அனுமதி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

1 mins read
f5922c56-0445-4735-a4f0-12bc9c758d9f
சதுரகிரியில் தொடர் மழை பெய்துவருவதால், பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

ஸ்ரீவில்லிபுத்தூா்: மேகமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ்பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவணி மாத பிரதோஷம், பௌர்ணமியையொட்டி ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி சனி பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல ஆவலுடன் வந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

குறிப்புச் சொற்கள்
அனுமதிவழிபாடுபாதுகாப்பு