சென்னை: விஜய் தமது தமிழக வெற்றிக் கழகக் கட்சிக் கொடியை வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்ய உள்ளார்.
கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றுவதற்காக, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அக்கம்பத்தில் கொடி ஏற்றி ஒத்திகை செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் வலம் வரும் அந்த மஞ்சள் நிறக் கொடியில், வாகை மலருக்குள் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுதான் இறுதியான வடிவமா எனத் தெரியவில்லை.
கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ள மாநாடுக்கு முன்னதாக, கட்சிக் கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர், மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

