உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய மலேசிய இளையர் கைது

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய மலேசிய இளையர் கைது

1 mins read
a06dacee-2986-4a78-9d83-3ae0eb3eb64a
மலேசிய இளையரை தனி அறைக்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். - படம்: ஊடகம்

சென்னை: மலேசியாவில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த இளையர் சென்னையில் கைதானார். கோலாலம்பூரிலிருந்து தங்கம் கடத்தி வருவது குறித்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்தது.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இளையரின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. எனவே அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் தனது உள்ளாடைக்குள் சிறிய உறையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.

அதன் மதிப்பு ரூ.77 லட்சம் என்றும் இக்கடத்தலின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.