பத்துத் திங்கள்
சுமந்த வயிற்றுக்கு
கடன்பட்டேன்.
பட்ட கடனை
வாழ்நாளில்
தீர்த்துவிடலாம்.
மண்ணில்
விழுந்தபோது
பூமிக்குக் கடன்பட்டேன்.
பிணமாகி,
மண்ணோடு மண்ணாகி மக்கி
பட்ட கடனைத்
தீர்த்துவிடலாம்.
வீட்டை வாங்கி
விற்றவனுக்கு
கால் நூற்றாண்டு
கடன்பட்டேன்.
மாடாய் உழைத்து
பட்ட கடனைத்
தீர்த்துவிடலாம்.
ஆனால்,
எனக்கு
வயிறார உணவளித்து,
தான் கால்வயிறு கஞ்சியுண்டு,
கொளுத்தும் வெயிலில்,
வயலில் கரிந்திடும்
அந்த ஏழை சகோதரனுக்கு,
எப்படி நான்
பட்ட கடனைத்
தீர்க்கப்போகிறேன்?
அ.ஷாஹூல் ஹமீது

