ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளிய ராமேஸ்வர மீனவர்கள்

ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளிய ராமேஸ்வர மீனவர்கள்

1 mins read
14a8a244-38ce-4396-9a08-cd92184c6971
தமிழகத்​தில் மீன்பிடித் தடைக்​காலம் ஞாயிற்​றுக்கிழமையுடன் (ஜுன் 14) முடிவடைந்​த​ நிலையில் விசைப்​படகு மீனவர்​கள் தற்​போது கடலுக்​குச் சென்று வரு​கின்​றனர். - படம்: இந்து தமிழ் திசை

ராமேஸ்வரம்: மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து கடலுக்​குச் சென்ற ராமேஸ்வரம் விசைப்​படகு மீனவர்​கள் அதிக மீன்​கள் கிடைத்​த​தால் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

தமிழகத்​தில் மீன்பிடித் தடைக்​காலம் ஞாயிற்​றுக்கிழமையுடன் (ஜுன் 14) முடிவடைந்​த​ நிலையில், விசைப்​படகு மீனவர்​கள் தற்​போது கடலுக்​குச் சென்று வரு​கின்​றனர்.

ஞாயிற்​றுக்கிழமை மாலை​யி​லிருந்து கிட்டத்தட்ட 700க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் ஏறத்தாழ 3,500 மீனவர்​கள் ராமேஸ்வரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீன் பிடிக்​கச் சென்​றனர்.

அந்தப் படகு​கள் செவ்​வாய்க்​கிழமை (ஜூன் 16) அதி​காலை முதல் மீன்​பிடித் துறை​முகத்​துக்குத் திரும்​பத் தொடங்​கின. செவ்வாய்க்கிழமை மட்​டும் விசைப்​படகு மீனவர்​களுக்கு கிட்டத்தட்ட 2 லட்​சம் கிலோ இறால் மீன், கணவாய், நண்டு ஆகிய ஏற்​றுமதி மீன்​களும் செறை​யா, பாறை, திருக்கை உள்​ளிட்ட இதர மீன்​கள் ஏறத்தாழ 3 லட்​சம் கிலோ வரை​யிலும் கிடைத்​துள்​ளன. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.10 கோடிக்​கும் மேல் ஆகும்.

வழக்​க​மாக முதல் தரத்திலான ஒரு கிலோ இறால் ரூ.500க்கு மேல் விலை போகும். ஆனால் மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து முதல் நாளன்று மீனவர்​கள் கரை திரும்​பிய​தில் அதி​கள​வில் இறால் சிக்​கிய​து. இதனால், வியா​பாரி​கள் அவற்றை விலை நிர்​ண​யம் செய்​யாமல் கொள்​முதல் செய்​தனர்.

மேலும், மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து கடலுக்​குச் சென்ற ராமேஸ்வரம் விசைப்​படகு மீனவர்​களுக்கு அதிக மீன்​கள் கிடைத்​ததால் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

குறிப்புச் சொற்கள்