தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோப்புக்கரணம் போட்ட மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு; ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க ஆசிரியைக்கு உத்தரவு

1 mins read
a48b5643-26bf-40f6-9978-d52937ef29c9
மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. - படம்: இணையம்

சென்னை: வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பள்ளியின் தமிழ் ஆசிரியையான சித்ரா வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி ஒருநாள் 200 முறையும், மறுநாள் 400 முறையும் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.

இதனால் களைப்படைந்த சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலமுறை தோப்புக்கரணம் போட்டதால் அவரது உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மகளின் உடல்நிலை பாதிப்புக்குக் காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய் பாண்டிசெல்வி, தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

மனுவை விசாரித்த ஆணையம், ஆவணங்களின்படி, ஆசிரியை சித்ரா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். அதை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்” என உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்