தஞ்சை: பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேடுதல் குழுவை மாநில ஆளுநரே அமைக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று யுஜிசி அறிவிப்பு நகலைத் தீயிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் திரளாக கலந்துகொண்டனர்.