சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைத் தளர்த்த உச்ச நீதிமன்றம் மறுப்பு

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைத் தளர்த்த உச்ச நீதிமன்றம் மறுப்பு

1 mins read
0efac041-e962-4ae1-9680-69fa16e1e289
யூடியூபர் சவுக்கு சங்கர். - கோப்புப் படம்: தினமணி

சென்னை: பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யூடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விலக்கக்கோரி அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த மாதம் 13ஆம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, மருத்துவக் காரணங்களுக்காக பிணை வழங்க வேண்டும் என்று அவரது தாயார் நீதிமன்றத்தை அணுகினார். அதனைத் தொடர்ந்து நிபந்தனைகளின் அடிப்படையில் சங்கருக்குப் பிணை வழங்கப்பட்டது.

ஆனால் பிணைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே, தமக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி சங்கர் சார்பில் அளிக்கப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்க்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

“இது என்ன புதிய வழக்கு? நாங்களும் பார்க்கிறோம் ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பிணை நிபந்தனைகளைத் தளர்த்த முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்