மயிலாடுதுறை: தைவான் நாட்டைச் சேர்ந்த இளம் ஜோடி மயிலாடுதுறையில் இந்து முறைப்படி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஏராளமானோர் நேரிலும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தைவானைச் சேர்ந்த இ மிங், சு ஹூவா ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பினர்.
இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள சித்தர்பீடத்தில் நடைபெற்றது.
இதில் இருவரது உறவினர்கள், நண்பர்கள் தைவானில் இருந்து வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டது மிகுந்த மனநிறைவை அளித்ததாக புதுமணத் தம்பதியினர் தெரிவித்தனர்.
இருவரது உறவினர்களும் தமிழர் மரபுப்படி பட்டு வேட்டி, சேலையுடன் திருமணத்தில் கலந்துகொண்டனர்.