தாம்பரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

தாம்பரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

1 mins read
d705674a-1111-4fcc-b629-77e425341a00
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: தமிழ் முரசு

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் ரூ.300 கோடி மதிப்​புள்ள அரசு நிலங்​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்குத் தொடரப்​பட்​டுள்​ளது.

நில மோசடி​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள்மீது ஒரு வாரத்​துக்​குள் அரசு நடவடிக்கை எடுக்​கா​விட்​டால், சிபிஐ வி​சா​ரணைக்கு உத்​தர​விட நேரிடும் என்று நீதி​மன்​றம் எச்​சரித்​துள்​ளது.

சென்னை தாம்பரம் மண்டலத்திற்கு உட்பட்ட அகரம்​தென் கிராமத்​தில் அரசுக்குச் சொந்தமான பெருமதிப்பிலான நிலங்கள் உள்ளன.

அவை தனிநபர்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தீவிர புலனாய்வில், அப்பகுதியில் உள்ள ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த நில அளவையாளர், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மனைப்பிரிவு விற்பனையாளர் ஆகியோர்மீது தாம்பரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அரசு நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நிலம்மோசடிகாவல்துறை