சட்டமன்றத் தேர்தல்: சென்னை சென்ற அனைத்துலகக் குழு

சட்டமன்றத் தேர்தல்: சென்னை சென்ற அனைத்துலகக் குழு

1 mins read
752f77c3-39f2-417d-a10c-97b3e8e7a1cd
‘என்னுடைய வாக்கு, என்னுடைய உரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்துலகக் குழுவினர் பங்கேற்றனர். - படம்: தினமணி

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை நேரில் பார்வையிட பத்து நாடுகளைச் சேர்ந்த இருபது பேர் கொண்ட அனைத்துலகக் குழு ஒன்று சென்னை வந்தது.

இந்தக் குழுவினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தனர். இக்குழுவினருடன் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மூன்று பிரதிநிதிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு பள்ளிக்குச் சென்ற அனைத்துலகக் குழுவினருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், அனைவருக்கும் இளநீர் வழங்கப்பட்டது.

பின்னர், ‘என்னுடைய வாக்கு, என்னுடைய உரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்குழுவினர் பங்கேற்றனர்.

தேர்தல் தொடர்பாக இந்தியாவில் பின்பற்றப்படும் நடைமுறைகள், தேர்தல் கால விதிமுறைகள் ஆகியவை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு குறித்த அனுபவங்களை அனைத்துலகக் குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

இந்த அனுபவங்களுடன் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்