தமிழகத்தில் ரூ.75,000 வரையிலான பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி

தமிழகத்தில் ரூ.75,000 வரையிலான பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி

2 mins read
அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் சுமை
43a2c94a-ac47-4e9a-9111-c718c9ac4e34
கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) உரையாற்றிய விஜய், விவசாயிகளின் நல்வாழ்வை உறுதிசெய்யும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு 100 விழுக்காடு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 தள்ளுபடி செய்யப்படும்.

இதனால், ஏற்கெனவே பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக 40,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் உள்ளிட்ட பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு ஏறத்தாழ ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

என்றபோதும் தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குவதாக விஜய் குறிப்பிட்டார்.

முன்னதாக, மே 25ஆம் தேதி ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில், விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று இத்தள்ளுபடி வரம்பு தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுபயிர்வேளாண்மைவிவசாயிகடன்தள்ளுபடிதமிழகம்விஜய்அறிவிப்புசட்டமன்றம்