சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து, அந்நாட்டு அரசு பரிசீலிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தமது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியிருப்பது நம்பிக்கை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்ப ஒப்படைப்பது குறித்தும் இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீனவர் விவகாரம் குறித்து பிரதர் மோடிக்கு, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியும் கடிதம் எழுதியுள்ளார்.