தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அரசு: மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ் செல்லாது

1 mins read
8c8890ba-4408-4e5a-adfe-7569b564d805
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் திங்கள்கிழமை தாக்­கல் செய்­யப்­பட்­டது.   - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்குக் கட்டாயப் பணி ஓய்வு வழங்கவும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றவும் தமிழக அரசு கூறியுள்ளது.

கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் நாடு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதுபோன்ற ஆசிரியர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவர். அத்துடன் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய கல்விச் சான்றிதழ்கள் செல்லாதவையாக ஆக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்த வழிமுறைகள் பற்றி காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

மாணவர்கள் புகார் அளிக்க பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள் பற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதோடு, மாணவ, மாணவியர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான காணொளிகளையும் காண்பிக்க வேண்டும் என்றும் கல்வி நிலையங்களுக்குத் தமிழ் நாடு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

என்சிசி, ஜேஆர்சி, சாரண சாரணியர் இயக்கம் போன்றவை செயல்படும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்