விண்வெளியில் தமிழகம், தமிழர்களின் வெற்றிப் பயணம்
வானை அளப்போம்
கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தியல்
கண்டு தெளிவோம்
- என்றார் மகாகவி பாரதி.
அவர் என்றோ கண்ட கனவு இன்று நனவாகி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘கனவு காணுங்கள்’ என்று எப்போதும் சொல்லி வந்தார் தமிழ் விஞ்ஞான அறிஞர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.
ஆக்கபூர்வமான கனவுகள் ஒரு நாள் நனவாகும். அதையே அவர் வலியுறுத்தினார்.
எதிலும் முன்னோடியாக விளங்கிய தமிழன் சங்க காலத்திலேயே வானியல் சாஸ்திர அறிவோடுதான் வாழ்ந்திருக்கிறான்.
கலிலியோ டெலஸ்கோப்பை கண்டுபிடித்து, அதன் வழி சூரியனையும் கோள்களையும் ஆராய்ந்து சொல்வதற்கு முன்பே, சூரியனையும் அதைச் சுற்றும் கோள்களையும் கண்டு நவகிரகங்களாக கோவில்களில் சிற்பம் வடித்தான் தமிழன்.
வியாழன் கிரகம் மஞ்சள் நிறமானது என்பதை எப்படிக் கண்[Ϟ]டானோ?
‘பொலங்கலம்’, ‘பொன்கலம்’ என வியாழனைப் பாடினார்கள். புறநானூறு (392வது பாடல்)
திருமுருகாற்றுப்படை உட்பட பல்வேறு இலக்கியங்களில் தமிழர்களின் விண்வெளி அறிவைப் பறைசாற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
‘வானமே எல்லை’ என வாழ்ந்த இனம் தமிழினம்.
அதனால்தான் விண்வெளித்திரையில் தமிழர்களின் திற[Ϟ]மையை மேலும் ஊக்கப்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகச் சொல்கிறது தமிழக அரசு.
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளார். மனிதகுலம் நீக்கவும் விண்வெளியில் குடி[Ϟ]யேறும் தனது பயணத்தில் அடுத்த அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளது.
இந்தியாவும் விண்வெளித்துறையில் பல்வேறு புதிய முக்கிய மைல்கற்களை எட்டிப்பிடித்து வருகிறது எனலாம். இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம், இந்திய அரசாங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு இந்திய
மாநிலங்களும் தங்களது பங்களிப்பைத் தந்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.
10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகள்
விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்து மற்றும் சில முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
புதிய விண்வெளி கொள்கை வெளியிடப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதாவது, வானூர்தி, பாதுகாப்புத் துறையில் தமிழ்நாடு பெரும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் இத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிகளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்வெளித்துறையில் புதுமைகளை உரு[Ϟ]வாக்[Ϟ]கவும் முதலீடுகளை ஈர்க்கவும் ‘தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தைச் சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ‘ஸ்பேஸ் பே’ (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சி பணிகள் விரைவுப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை துறைசார்ந்த நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக தொழில்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் பூங்கா
தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும் அரசின் டிட்கோ நிறுவனம், இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்[Ϟ]துறை பெருவழித்தடத்தை (TNDIC) செயல்படுத்துவதற்கான ஒரு முகமை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO - டிட்கோ) செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெருகிவரும் விண்வெளித்துறை சார்ந்த நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு, சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில்[Ϟ]துறை, உந்துசக்தி பூங்காவை அமைப்பதற்கு டிட்கோ திட்டமிட்டுள்ளது. இப்பூங்காவில் அமையவுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு திறன்மிகு மையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
இன்-ஸ்பேஸ் (IN-SPACe) என்பது இந்தியாவில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின், அனைத்து விண்வெளித் துறை நடவடிக்கைகளுக்கான ஒற்றைச் சாளர முகமை நிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஏவுதல் வாகனம், செயற்கைக்கோள்களை உருவாக்குதல், விண்வெளித்துறை சார்ந்த சேவைகளை வழங்குதல், விண்வெளி உள்கட்டமைப்பு வசதிகளை பகிர்தல் மற்றும் புதியவசதிகளை நிறுவுதல் போன்ற பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், மேற்பார்வையிடுதல் ஆகியவற்றை செயல்படுத்தும்.
உலக விண்வெளி தொழில்துறையில் தமிழகம் ஒரு மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் பங்கு வகிக்கும் என்கிறது தமிழக அரசு.
மேலும், புதிய மற்றும் விரிவாக்க தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தவும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களுடன் தமிழக அரசு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
‘விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சாதனங்கள் உற்பத்தியில் உலகளாவிய அளவில் முக்கிய இடத்தில் இருக்கும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு குஜராத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்த இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி மற்றும் இந்த துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டம் குறித்தும் இந்த அரங்கில் விளக்கப்பட்டது.
சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டு
விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு பாராட்டு விழா நடத்தியது.
உயர் கல்வித்துறையின் சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்[Ϟ]டோர் கெளரவிக்கப்பட்டனர்.
சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வின் தலைநகராகும் மகேந்திரகிரி
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு செயற்கைக்கோள்கைளை அனுப்ப உதவும் ராக்கெட்டுகளை (உந்துகணைகள்) கிரை[Ϟ]யோ[Ϟ]ஜெனிக் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
மகேந்திரகிரி மலை என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலையாகும்
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1,654 மீட்டர் ஆகும்.
விண்வெளி ஆய்வுக்கு உகந்த இடமாக மகேந்திரகிரி பகுதி கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இங்கு அமைக்கப்படும் ஆய்வு மையம்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் எனக் கருதப்படுகிறது.
அந்த வகையில், மகேந்திரகிரி பகுதி இந்திய விண்வெளி ஆய்வின் தலைநகராக உருவெடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது’ என்று தன் உடலை முதலில் ஆராய்ந்து, அதன்பின் அண்டமாகிய வானத்தை ஆராய்ந்து, அண்டத்தின் எதிரொலியே பிண்டம் என அறிவித்த தமிழ[Ϟ]னின் அறிவியல் அறிவு வாழ்க!