சென்னையை பூங்காக்களின் தலைநகரமாக தமிழக அரசு மாற்றும்: தலைமைச் செயலாளர் முருகானந்தம்

சென்னையை பூங்காக்களின் தலைநகரமாக தமிழக அரசு மாற்றும்: தலைமைச் செயலாளர் முருகானந்தம்

1 mins read
46d5047b-f6a1-4798-a36e-b686764aa346
தலைமைச் செயலாளர் முருகானந்தம். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை பூங்காக்களின் தலைநகரமாக தமிழக அரசு மாற்றும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையில் 12 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நகராட்சிப் பகுதிகளில் 1,250 பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை ஒரு கான்கிரீட் வனமாக காட்சியளிக்கிறது.

கூடிய விரைவில் இம்மாநகரம் பூங்கா நகரமாக மாற்றப்படும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது,” என்றார் தலைமைச் செயலாளர்.

தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களிலும், தேவைப்படும் மற்ற இடங்களிலும் மலர்கள் நடப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் 10,000 மலர்கள் நடப்பட்டு வருவதாகவும், பருவமழைக்காலம் தீவிரமடைவதற்குள் இந்த நடவடிக்கை முடிவடையும் என்றும் மாநகராட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையை பூங்கா நகரமாக மாற்றப்போவதாக தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்