தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறைக் கண்காணிப்பில் 26,000 குண்டர்கள்

1 mins read
9d4ebe26-df18-4dd8-afee-9750f36e1d39
மாதிரிப்படம்: - இந்திய ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் 26,432 குண்டர்கள், 546 தனிப்படைக் காவல்துறையினரின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக மாநிலத்தில் குண்டர்களின் அட்டூழியம் தலைதூக்கி இருப்பதால், காவல்துறையிடம் ஏற்கெனவே உள்ள குண்டர்களின் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாகத் தலைதுாக்கியுள்ள குண்டர்கள், அவர்களின் சுயவிவரம், புகைப்படம், வழக்கு விவரங்கள் ஆகியவை அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

“குண்டர்களை ஒழிக்கவும் அவர்களின் சமூக விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையில் 546 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முன்னாள், இந்நாள் குண்டர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளோம். அவர்களின் சொத்து, வருமானம் போன்றவை குறித்தும் விசாரிக்கவுள்ளோம்.

“சிறையிலுள்ள குண்டர்கள் யார் யார், அவர்களுக்கு இடையே பகை ஏதும் நிலவுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. தனிப்படையின் ஒட்டுமொத்த கவனமும் குண்டர்கள் பக்கம் திரும்பி உள்ளது,” என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குண்டர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளையும் காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்