தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகமே முன்னோடி: ஸ்டாலின்

1 mins read
db7c5b2d-c1af-4dd6-8c03-8fabe07d8a14
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

அந்த உரையில், இந்தியாவின் நீளமான கடற்கரையான மெரினாவைப் பாதுகாக்க நெய்தல் மீட்பு இணக்கம், கடல் அரிப்பைத் தடுக்க அலையாத்திக் காடுகள் உருவாக்கம், 5,000 நீர்ப்பாசனங்கள் அமைக்க நடவடிக்கை, நெகிழிப் பை ஒழிப்பு எனத் தமிழ் நாடு அரசு பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது என்றார் ஸ்டாலின்.

மேலும், நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவில் தமிழ் நாடு மூன்றாவது மாநிலமாகத் திகழ்கிறது என்றார் அவர்.

அத்துடன், இயற்கை வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையிலும் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஸ்டாலின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்