சென்னை: பயிர் உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், கல்வியில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
“விவசாயிகளுக்கு உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இங்கு ஒரு கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
“வேளாண்மையில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் முன்னேறி வருகிறது. மேட்டூர் அணையைக் குறித்த நேரத்தில் திறந்து வருகிறோம்,” என்றார் திரு ஸ்டாலின்.
நடப்பாண்டில் 5.65 லட்சம் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் குறுதானியம், நிலக்கடலை உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.