காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சம்

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சம்

2 mins read
91d8be75-cf38-4bc9-961f-e3ed83fe0015
தற்​போதைய நில​வரப்​படி தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்​கள் 9,500 மெகா வாட் திறனில், காற்​றாலை மின் உற்​பத்தி நிலை​யங்​களை அமைத்து உள்​ளன. - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு 36வது முறையாக 100 மில்லியன் யூனிட்டுகளைக் கடந்து சாதனை படைத்தது தமிழ்நாடு.

இந்​தி​யா​வில் குஜ​ராத்​துக்கு அடுத்​தபடி​யாகத் தமிழ்​நாடு அதிக காற்​றாலை மின் கட்​டமைப்பைக் கொண்​டுள்​ளது. இதனால் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை தொடர்பான மின் உற்பத்தியை இந்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மேலும், பல்வேறு மானியங்களையும் வழங்கி வருகிறது.

தற்​போதைய நில​வரப்​படி தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்​கள் 9,500 மெகா வாட் திறனில், காற்​றாலை மின் உற்​பத்தி நிலை​யங்​களை அமைத்து உள்​ளன.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய காற்​றாலைப் பண்​ணை​களில் ஒன்​றான முப்​பந்​தல் காற்​றாலைப் பண்ணை கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் இயங்கி வரு​கிறது.

இந்நிலையில், இந்​தாண்டு மே மாதம், காற்​றாலைப் பருவகாலம் தொடங்​கிய​தில் இருந்​து, அவற்றில் தின​மும் சராசரி​யாக 80 மில்​லியன் யூனிட் மின்​சா​ரம் கிடைத்து வந்தது. தற்​போது மின் உற்​பத்தி புதிய உச்​சத்தைத் தொட்டு சாதனை படைத்​துள்​ளது.

அதன்​படி, இந்த ஆண்டில் மட்​டும் 36வது முறை​யாக அன்றாட மின் உற்​பத்தி 100 மில்​லியன் யூனிட்டைக் கடந்​து, கடந்த 2025ஆம் ஆண்​டில் எட்​டப்​பட்ட 35 முறை என்ற சாதனையை முறியடித்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கடந்த ஏப்​ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையி​லான காலகட்​டத்​தில் மின்​வாரி​யம் மொத்​த​மாக 8,491 கோடி மில்​லியன் யூனிட் காற்​றாலை மின்​சா​ரத்தைப் பெற்​றுள்​ளது.

ஜூலை மாதம் மட்​டும் 3,291 மில்​லியன் யூனிட் மின்​சாரத் தொகுப்​பில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். வரும் நாள்​களில் காற்​றின் வேகம் அதி​கரிக்​கக்​கூடும் எனக் கூறப்​படு​வ​தால், காற்​றாலை மின் உற்​பத்தி மிக அதிக அளவை எட்​டும்​ என அரசு அதிகாரிகள் கூறியதாகத் தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

குறிப்புச் சொற்கள்
மின்சாரம்உற்பத்திகுஜராத்சாதனை