தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜகவுக்கு தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

1 mins read
bb28b0bd-d528-4d76-9a66-96aacee5c1c6
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவத்தை நீடிக்கவிட மாட்டோம். தமிழுக்கும், தமிழகத்துக்கும் பாஜகசெய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும், அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தித் திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகப் பள்ளிகளில் 3வது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன, இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள் என்று ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும், சஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ் நாடுஸ்டாலின்பாஜக