சென்னை: நார்வே சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் வழங்கி சிறப்பித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 8) முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் பிரக்ஞானந்தா.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு அமையும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.
முதல்வர் தன்னுடன் சதுரங்கம் விளையாட விரும்புவதாக தனக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் முதல்வர் தன்னுடன் விளையாடியதாகவும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
“அவருடன் (முதல்வர் விஜய்) 15 நிமிடங்கள் விளையாடினேன்.
“அவர் நன்றாக ஆடினார். தன் நண்பர்களுடன் சதுரங்கம் விளையாடுவதுண்டு என்றும் குறிப்பிட்டார்.
“நான் அடுத்து விளையாடும் போட்டி குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார். அவரிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. அவரைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது,” என்றார் பிரக்ஞானந்தா.

