தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து

2 mins read
40ce65af-3020-406a-984a-38d1db2b0353
தமிழக சட்டப் பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. - படம்: தி இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்குக் கூடியது.

ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் முதன்முறை​யாக உரையாற்றிய கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதமும் ஒலித்தது. இதில் ஏதேனும் சர்ச்சை உருவாகுமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் சலசலப்புகள் இன்றி சுமுகமாகத் தொடங்கியது. ஆனால், எவ்வித சர்ச்சையோ சலசலப்போ இன்றி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றினார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநரை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்துடன் வரவேற்றனர்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலைமை​யில் வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்​கியது.

இந்த கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

முன்னதாக முதல்வரும் அமைச்சர்களும் பதவியேற்ற விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்தார். அவர் தனது உரையில், அறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், பெயர்கள் உச்சரிப்பில் பிழைகள் இருந்தால் பொறுத்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலைமை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததைச் சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேர​வை​யில் வாசிக்​காமல் வெளி நடப்புச் செய்தார்.

அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்​பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்