ரூ.8,423 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: ஸ்டாலின்

வள்ளலார் குறித்து மக்களுக்கு மேலும் அறிந்திடச்செய்யும் வகையில் திட்டங்கள் அறிவிப்பு

ரூ.8,423 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: ஸ்டாலின்

2 mins read
c3d8660a-5e1d-4855-bbde-18815dfa2f3d
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026யை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். - படம்: தினமணி

சென்னை: அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ.8,423 கோடி மதிப்புள்ள 8,106 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொன்மையான 4,192 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. திருக்கோவில்கள் சார்பில் 2,800 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. 19 கோவில்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டா்ர.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியை திரு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் வள்ளலார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்

வள்ளலார் தமிழ்ச்சமூகத்தில் உதித்த புரட்சியாளர்; மாண்பாளர் அவரைப் போற்ற வேண்டியது தமிழகத்தின் கடமை என்றார் அவர்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். ஏழை மக்களின் பசியை ‘பிணி’ என்று சொன்னார் வள்ளலார். அந்த வகையில் திமுக அரசு காலை உணவுத் திட்டம் வழங்குவதை ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டையொட்டி திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. அதற்கான பெயர்ப் பலகையை காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வள்ளலார் நோக்கங்களைச் சிதைத்திட அனுமதிக்கக்கூடாது என்ற ஸ்டாலின், வள்ளலார் குறித்து மக்களுக்கு மேலும் அறிந்திடச்செய்யும் வகையில் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார். மேலும், வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி, வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம், அறநிலையத்துறை பதிப்பகம் மூலம் வள்ளலார் நூல் வெளியீடு, வள்ளலார் பிறந்தநாளையொட்டி, ஆண்டுதோறும் 3 நாள் விழா, மேட்டுக்குப்பம், மருதூர் உள்ளிட்ட இடங்களில் வள்ளலார் அன்னதானக் கூடங்கள், கடலூர் மாவட்ட ஆணையர் அலுவலகம் அருகே அமைந்து வரும் பூங்காவுக்கு வள்ளலார் பூங்கா என பெயர் சூட்டல் முதலிய திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்