டெக்சாசில் துப்பாக்கிச்சூடு: இந்திய வம்சாவளி மாணவி உயிரிழப்பு

டெக்சாசில் துப்பாக்கிச்சூடு: இந்திய வம்சாவளி மாணவி உயிரிழப்பு

படம்: கனடா மிரர்

03 Mar 2026 - 10:12 pm

1 mins read

டெக்சஸ்: அமெரிக்காவின் ஆஸ்டின் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் அடையாளம் தெரியாத ஒருவர் மார்ச் 1ஆம் தேதி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

அச்சம்பவத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில், மாண்டோரில் ஒருவர் 21 வயது இந்திய வம்சாவளி மாணவி என்பது தெரியவந்துள்ளது.

டெக்சஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அவரின் பெயர் சவிதா சண்முகசுந்தரம். சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகப் படிப்பை முடித்த அவர், அடுத்த வாரம் பணியில் சேரவிருந்ததாகக் கூறப்படுகிறது.

அச்சம்பவம் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நிடியாகா டியாக்னே (53) என்பவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். அவர் செனகல் நாட்டில் இருந்து குடியேறி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராவார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காதுப்பாக்கிச்சூடுமாணவிஉயிரிழப்பு