தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைப்பூசம் 2025: இன்று முதல் 3 நாள்களுக்கு 1,320 சிறப்புப் பேருந்துகள் இயங்கும்

1 mins read
028cdd12-b539-480e-a6b9-07de8d3f496a
சிறப்புப் பேருந்துகள் இயங்க இருக்கின்றன. - படம்: ஊடகம்

சென்னை: பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகூர்த்தம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

“சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) 380 பேருந்துகள் இயக்கப்படும்.

“சனிக்கிழமை 530 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்