திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்: விசிக கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம்

திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்: விசிக கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம்

1 mins read
82f0ab77-cc90-48f2-b95e-09f107847451
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். - படம்: டெக்கான் குரோனிக்கல்ஸ்

சேலம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலூரில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஓமலூர் மாவட்டச் செயலாளர் சாமுராய் குழு தலைமை தாங்கியது.

அந்தக் கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடவேண்டும் என்றும் அவர், வெற்றி பெற்று எளிய மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் அவரை துணை முதல் அமைச்சராக்க வேண்டும் என்றும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழுக் கூட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் காஜாமைதீன், மண்டல துணை செயலாளர்கள் அங்கப்பன், தெய்வானை உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், அவரோ அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், “இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் நான் துணை முதல்வர் பதவி கேட்கவில்லை. அத்துடன் எதிர்வரும் இடைத்தேர்தலில் தவெகவிற்கு எந்தவிதமான அழுத்தத்தையும் தர விரும்பவில்லை ,” என்றும் திரு தொல் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்