கள்ளநோட்டு விவகாரம்- கட்சிநிர்வாகியை நீக்கிய திருமாவளவன்

கள்ளநோட்டு விவகாரம்- கட்சிநிர்வாகியை நீக்கிய திருமாவளவன்

படம்: ஊடகம்

31 Mar 2025 - 6:17 pm

1 mins read

கடலூர்: கடலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டதில் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் விசிக கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் செல்வத்தை நீக்கவும் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்