கொலை மிரட்டல்; நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறையில் புகார்

1 mins read
16d8f4dc-87a7-47af-a80b-f3a73d5c459c
எஸ்.வி.சேகர். - படம்: ஊடகம்

சென்னை: கைப்பேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் தம்மைத்தாமே சவுக்கால் அடித்துக்கொண்டது தொடர்பாக, தான் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்ததாகவும் இதையடுத்து தமக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிட்டார்.

“நிறைய கைப்பேசி அழைப்புகள் வருகின்றன. எனவே, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன்,” என்று எஸ்.வி.சேகர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்