ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயுக் கலன்: பாஜக தேர்தல் வாக்குறுதி

ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயுக் கலன்: பாஜக தேர்தல் வாக்குறுதி

1 mins read
db97163c-3c17-4b14-9e45-bf418105ffe6
பாஜக முன்னாள் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். - படம்: தினமணி

சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை வெளியானது.

அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டா அறிக்கையை வெளியிட்டார்.

ஆண்டுதோறும் மூன்று இலவச எரிவாயுக் கலன்கள் வழங்கப்படும், தைப்பூச திருநாள் மாநில விழாவாக அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக முன்வைத்துள்ளது.

இலவச எரிவாயு கலன்கள் பொங்கல், சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளின்போது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற முக்கியமான கட்சிகளைப் பின்பற்றி, மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும் பாஜக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள பத்து நகரங்களை நாட்டின் முதல் 100 தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம்பெறவும் பாலியல் குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள பாஜக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீண்டும் தீபமேற்றுவதை உறுதி செய்யும் எனக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்