டிராக்டர் கவிழ்ந்து மூவர் உயிரிழப்பு: ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

டிராக்டர் கவிழ்ந்து மூவர் உயிரிழப்பு: ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

1 mins read
8725aeed-5a78-4f7d-a69e-5632dbb14b6b
தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: இணையம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர். மாண்டோரின் குடும்பத்தாருக்கும் காயமடைந்தோருக்கும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

“ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு டிராக்டரில், வெற்றிமாலை கண்மாய் கரையருகில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கண்மாய் கரையில் உள்ள சாலையில் இருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பொன்னம்மாள் (68) ராக்கி (62), முனியம்மாள் (55) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

“இவ்விபத்தில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்மருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்டோரின் குடும்பங்களுக்குத் தலா மூன்று லட்சம் ரூபாயும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்