மஞ்சுவிரட்டுக் காளைகள் முட்டி பார்வையாளர்கள் மூவர் உயிரிழப்பு

மஞ்சுவிரட்டுக் காளைகள் முட்டி பார்வையாளர்கள் மூவர் உயிரிழப்பு

1 mins read
d337cca4-44e8-4c76-bb50-b627fa6998b9
மஞ்சுவிரட்டு நிகழ்வைக் காண சிங்கம்புணரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சிவகங்கை: சிங்கம்புணரி பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில், காளைகள் முட்டியதில் மூவர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜனவரிமுதல் மார்ச்வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றது. அதில் 500 காளைகள் களமிறக்கப்பட்டன.

மஞ்சுவிரட்டு நிகழ்வைக் காண சிங்கம்புணரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

சீறிவந்த காளைகளை அடக்க வீரர்கள் முயன்றபோது, அவர்களிடமிருந்து தப்பித்த காளைகள் சில தடுப்பரண்களை மீறி, பார்வையாளர்களில் சிலரையும் முட்டித்தள்ளின.

இவ்வாறு காளையிடம் சிக்கிய பார்வையாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது. அவர்களில் உள்ளூரைச் சேர்ந்த இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

படுகாயம் அடைந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்