தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏஐ தொழில்நுட்ப உதவியோடு மூன்று தீவிரவாதிகள் கைது: தமிழக டிஜிபி

2 mins read
4f879724-bdf8-4e12-9f37-791333cb3335
டிஜிபி சங்கர் ஜிவால். - படம்: ஊடகம்

சென்னை: பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூன்று தீவிரவாதிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (ஏஐ) உதவியோடு கண்டுபிடித்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

“கைதான அபுபக்​கர் சித்​திக், டெய்​லர் ராஜா, முகமது அலி ஆகிய மூவரும் கோவை குண்​டு​வெடிப்பு உட்பட பல்​வேறு வழக்​கு கடந்த முப்பது ஆண்டுகளாக தேடப்​பட்டு வருபவர்கள்,” என்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

“தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய பக்​ருதீன், பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோர் முன்னதாகச் சிக்​கினர். அவர்​களு​டன் தொடர்​புடையவர் நாகூரைச் சேர்ந்த அபுபக்​கர் சித்​திக்.

“அவர் மீது தமிழகத்​தில் 5 வழக்​கு​களும், கேரளா​வில் 2 வழக்​கு​களும், கர்​நாட​கா, ஆந்​தி​ரா​வில் தலா ஒரு வழக்​கு​ம் உள்​ளன. அபுபக்​கர் சித்​திக்கை அம்​மாநில காவல்துறையும், மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களும் 30 ஆண்​டு​களாகத் தேடி வந்​தன. இவர் உள்பட மேலும் சிலரை கைது செய்ய ‘ஆபரேஷன் அறம்’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேடத் தொடங்கினோம்,” என்று

“அவரது பழைய புகைப்​படங்​களை வைத்து ஏஐ தொழில்​நுட்​பம், தொழில்நுட்ப நிபுணர்​களின் ஒத்​துழைப்​புடன் தேடு​தல் பணி முடுக்கி விடப்​பட்​டது. ​ஆந்திர மாநிலம் கடப்பா அருகே சித்திக் அண்​மை​யில் கைது செய்யப்பட்டார்.

“இதேபோல் 30 ஆண்டுகளாகத் தலைமறை​வாக இருந்த டெய்​லர் ராஜா ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம், ஏஐ தொழில் நுட்​பம், கர்நாடக மாநிலக் காவல்துறை உதவியோடு கைது செய்யப்பட்டார்.

“பல்வேறு வழக்​கு​களில் தலைமறை​வாக இருந்த முகமது அலியை​யும் ஆந்​தி​ரா​வில் கைது செய்​தோம். மூவரையும் காவலில் எடுத்து விசா​ரிக்க உள்​ளோம். தமிழகக் காவல்துறையின் சிறப்​பான செயல்​பாடு​களால், வரும் காலங்​களில் தமிழகத்​தில் தீவிரவாதச் செயல்​களும் கடுமையான குற்​றங்​களு நடக்​காது என்ற நிலை உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது,” என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

குறிப்புச் சொற்கள்