திருப்பூர்: ஒடிசாவைச் சேர்ந்த பெண் திருப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த 17ஆம் தேதிதான் ஒடிசாவைச் சேர்ந்த 27 வயதான பெண், தனது கணவர், மூன்று வயது பெண் குழந்தையுடன் திருப்பூர் வந்து சேர்ந்தார்.