திருப்பூர்: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரி நடப்புக்கு வந்துள்ள நிலையில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
வணிக வாய்ப்புகளைத் தொடரும் நோக்கத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திக் கட்டணத்தில் இருந்து 3 முதல் 5 விழுக்காடு வரை விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
“சூழலைக் கருத்தில்கொண்டு, மானியம், வரி விலக்கு, கடனுதவி வழங்கக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். 3 முதல் 5 விழுக்காடுவரை, ஏற்றுமதியாளர்களும் தங்களுடைய உற்பத்திக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கவும் தயாராகவும் இருக்கிறார்கள். லாபம் குறைவு என்றாலும், வணிக வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 4 கட்டங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடி அமெரிக்க வணிகத்தில், ரூ. 3 ஆயிரம் கோடி தற்போதைய ஆர்டர் தேங்கி இருக்கிறது,” என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் கூறினார்.