திருப்பூர்: ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

திருப்பூர்: ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

படம்: தி இந்து

11 May 2024 - 7:29 pm

1 mins read

திருப்பூர்: திருப்பூரின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 வயதுப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை, 2 ஆண் குழந்தைகள் என ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

தாராபுரச் சாலையைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின் மனைவி கௌசல்யா, 26 வயது, ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே நாளில், அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அக் குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் ஒன்றரைக் கிலோவும் மற்றொரு குழந்தை 1.75 கிலோ கிராமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால் உடனடியாக அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது குழந்தைகளின் உடல்நலம் முழுமையாகத் தேறிய நிலையில் 25 நாள்களுக்குப் பிறகு தாயும் குழந்தைகளும் வீடு திரும்பினர்.

குறிப்புச் சொற்கள்
குழந்தைகள்