திருவள்ளூர் ரயில் விபத்து; 13 அதிகாரிகளிடம் விசாரணை

திருவள்ளூர் ரயில் விபத்து; 13 அதிகாரிகளிடம் விசாரணை

2 mins read
537012ac-c92a-4465-bffb-5ac001572f4f
அக்டோபர் 11ஆம் தேதி ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் சீர்செய்யப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

சென்னை: மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி அக்டோபர் 11ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து ஏறத்தாழ 46 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கவரப்பேட்டையில் நிகழ்ந்தது.

மைசூரு-டர்பாங்கா பாக்மதி விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டன.

விரைவு ரயில் பென்னேரி ரயில் நிலையத்தை இரவு 8.27 மணி அளவில் அடைந்ததாகவும் அதற்கு அடுத்துள்ள கவரப்பேட்டை நிலையத்துக்குச் செல்ல பச்சைக்கொடி காட்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், பிரதான தண்டவாளத்தில் செல்வதற்குப் பதிலாக வேறொரு ரயில் பாதைக்குள் ரயில் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் இரண்டு ரயில்களின் பெட்டிகள் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்குத் தெற்கு ரெயில்வே அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதன்படி கவரப்பேட்டை ரயில் நிலைய மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி, கவரப்பேட்டை சிக்னல் ஆப்பரேட்டர்கள் உள்பட 13 பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை கோட்ட மேலாளர் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

இவர்கள் சனிக்கிழமை மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அவர்கள் முன்னிலையானது பற்றி மேல் விவரம் இல்லை.

இந்த விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தரப்பு கூறியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
ரயில்விபத்துமோதல்