இணையம் வழியாக ‘டாஸ்மாக்’கில் மதுபானத்திற்கு முன்பதிவு செய்யலாம்

இணையம் வழியாக ‘டாஸ்மாக்’கில் மதுபானத்திற்கு முன்பதிவு செய்யலாம்

1 mins read
2fc8eb5e-b4ee-4f32-93ac-ded8d42a3e9d
பணம் செலுத்தியதும் அனுப்பி வைக்கப்படும் ‘கியூஆர்’ குறியீட்டை சில்லறை விற்பனைக் கடையில் காட்டி மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.  - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்கமே நடத்தும் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், புதிய கைப்பேசி செயலியை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) முதல் அறிமுகப்படுத்த அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

இச்செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள கடையைக் கண்டறியலாம். மேலும், கையிருப்பில் உள்ள மதுபான வகைகள் மற்றும் அவற்றின் சரியான விலையைத் தெரிந்துகொண்டு, வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து பணத்தையும் செலுத்த முடியும். இத்திட்டம் மாநிலத்திலுள்ள அனைத்து 4,038 சில்லறை விற்பனைக் கடைகளிலும் நடப்பிற்கு வரவுள்ளது.

செயலி வழியாகக் கோரிக்கை விடுத்ததும் வாடிக்கையாளருக்கு ஒரு ‘கியூஆர்’ குறியீடு வழங்கப்படும். அதைச் சில்லறை விற்பனைக் கடையில் காட்டி மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இணையம் வழியாகப் பணம் செலுத்தப்படுவதால் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செயலிக்கு ‘டாஸ்மாக் ஆன்லைன் ஷாப்பிங்’ எனப் பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விலை வசூலிக்கும் ஊழியர்கள்மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அண்மையில் எச்சரிக்கப்பட்ட நிலையில் இச்செயலி அறிமுகமாகிறது. இத்திட்டம் குறித்து அதிகாரிகளுக்குப் ‘பிஓஎஸ்’ எனும் பணம் செலுத்துகருவிகள் மற்றும் இணையவழிப் பணப்பரிவர்த்தனைக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்