விஜய்யைச் சமூக ஊடகத்தில் பின்தொடர்வதை மகன் சஞ்சய் நிறுத்திவிட்டதாகத் தகவல்

விஜய்யைச் சமூக ஊடகத்தில் பின்தொடர்வதை மகன் சஞ்சய் நிறுத்திவிட்டதாகத் தகவல்

2 mins read
விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு மத்தியில் குடும்ப சர்ச்சை
b911627f-e4b0-4812-aea2-556fbf42b5ff
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையை இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஈட்டியுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரது அரசியல் பயணம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேவேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள் குறித்தும் இணையத்தில் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன.

குறிப்பாக, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையை இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டாரா என்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக ஒரு தகவல் வெளியானது.

27 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், விஜய்யின் செயல்பாடுகள் குறித்து அந்த மனுவில் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.

இந்தச் செய்தி பரவியது முதலே, ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் யாரைப் பின்தொடர்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் உற்றுநோக்கத் தொடங்கினர்.

ஜேசன் சஞ்சய் தற்போது 38 பேரை மட்டுமே இன்ஸ்டகிராமில் பின்தொடர்கிறார். இதில் விஜய் சேதுபதி போன்ற திரையுலகினர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அவரது தந்தை விஜய் அந்தப் பட்டியலில் இல்லை.

குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே சஞ்சய் தனது தந்தையை ‘அன்ஃபாலோ’ செய்துவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

சஞ்சய் ஆரம்பத்திலிருந்தே தனது தந்தையின் கணக்கையோ அல்லது அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தையோ பின்தொடரவில்லை. இது புதிதாக நடந்த ஒன்றல்ல என்று மற்றொரு தரப்பினர் விளக்கம் அளிக்கின்றனர்.

சங்கீதா அளித்ததாகக் கூறப்படும் மனுவில், 2021ஆம் ஆண்டிலிருந்தே விஜய் குடும்பத்தை விட்டு விலகி இருப்பதாகவும் ஒரு குறிப்பிட்ட நடிகையுடனான அவரது தொடர்பு தனக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சயின் தற்போதைய நிலை

குடும்ப சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், ஜேசன் சஞ்சய் தனது திரைப்பயணத்தில் மிகத் தீவிரமாக உள்ளார்.

சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘சிக்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்டுகள்’ மற்றும் கசிந்த தகவல்களின் அடிப்படையிலான செய்திகளே தவிர, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அதிகாரபூர்வமான விளக்கம் இன்னும் வெளிவரவில்லை.

குறிப்புச் சொற்கள்