தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை புறநகர்ப் பகுதியில் ரயில் விபத்து: 20 பேர் காயம்

1 mins read
da93b0ef-44d0-4f50-bed0-db4d86404653
மைசூரு-டர்பாங்கா பாக்மதி விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டன. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: பயணிகள் நிறைந்த விரைவு ரயில் ஒன்று சென்னை புறநகர்ப் பகுதியில், தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி அக்டோபர் 11ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து ஏறத்தாழ 46 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கவரப்பேட்டையில் நிகழ்ந்தது.

இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.

அந்த மைசூரு-டர்பாங்கா பாக்மதி விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டன.

விரைவு ரயில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விரைவு ரயில் பென்னேரி ரயில் நிலையத்தை இரவு 8.27 மணி அளவில் அடைந்ததாகவும் அதற்கு அடுத்துள்ள கவரப்பேட்டை நிலையத்துக்குச் செல்ல பச்சைக்கொடி காட்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், பிரதான தண்டவாளத்தில் செல்வதற்குப் பதிலாக வேறொரு ரயில் பாதைக்குள் ரயில் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது அது மோதியது.

தொடர்புடைய செய்திகள்

விரைவு ரயில் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்துக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தீயணைப்புப் படையினர் தீயை அணைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் செய்தி வெளியிட்டனர்.

பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறினர்.

காயம் அடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உணவு, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்