ரயிலில் தீ: பயணிகள் அவசர வெளியேற்றம்

ரயிலில் தீ: பயணிகள் அவசர வெளியேற்றம்

1 mins read
f2d5a9cc-8d34-44de-adc2-deb44b77ac5e
பயணிகள் அனைவரும் வேறொரு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டனர். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் ரயில் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.

காலை 9 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது திடீரென அதன் என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேற ஆரம்பித்தது.

அதனை அறிந்த ஓட்டுநர் உடனடியாக என்ஜின் பகுதியில் இருந்து இறங்கியதோடு ரயிலில் இருந்த மற்ற பயணிகளை வெளியேறும்படி கூச்சலிட்டார்.

அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் வெளியேறினர்.

வெளியேறிய பயணிகள் அனைவரும் அதேவழியாக வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரயில் என்ஜின் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
ரயில்தீவிபத்து

தொடர்புடைய செய்திகள்