தமிழகத் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள்: பாஜக

1 mins read
d01af7ff-4918-4f41-a402-03b3ea746661
நயினார் நாகேந்திரன். - படம்: kamadenu.in / இணையம்

சென்னை: தமிழகத்தின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றுமாறு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின்கட்டண உயர்வை ரத்து செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும். பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை சுரங்கப்பாதை அமைத்து இணைத்தால், நெல்லை மாவட்ட மக்கள் பயன்பெறுவர்” என்றார் நயினார்.

“இத்திட்டம் ஏற்கெனவே அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்கு வனத்துறையின் அனுமதி வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு சொன்னார்.

“வனத்துறையின் அனுமதியை நான் வாங்கித் தருகிறேன். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற முயற்சி மேற்கொண்டார். சென்னையில் பெரும் நெருக்கடி உள்ளது. திருச்சியில் காவிரி ஆறு ஓடுகிறது. அதனால், தண்ணீர் பிரச்சினை இல்லை.

“தமிழகத்தில் மட்டும் ஒன்பது, ‘வந்தே பாரத்’ ரயில்கள் விட்டுள்ளோம். தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருச்சிக்கு 3 மணிநேரத்தில் சென்றுவிடலாம். தலைநகரை மாற்ற, சென்னை எம்.எல்.ஏ பரந்தாமன் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை,” என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) சட்டமன்றத்தில் விவரித்தார் திரு நயினார் நாகேந்திரன்.

குறிப்புச் சொற்கள்