தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசிய நாடுகளுக்கான விமானச் சேவையில் திருச்சி முதலிடம்

1 mins read
f719542d-472f-410d-b55b-80fbeff5f60c
திருச்சி விமான நிலையம். - படம்: ஊடகம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தற்போது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவை இனி வாரத்திற்கு 72ஆக அதிகரிக்கவுள்ளது.

பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ஓடுபாதை இல்லாத போதும், அதிக விமானச் சேவைகளை அளித்து, பயணிகள் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது திருச்சி விமான நிலையம்.

கடந்த 2023-24 நிதியாண்டில், சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் 5.5 லட்சம் பயணிகளைக் கையாண்டு 4வது இடமும் கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளைக் கையாண்டு 3வது இடத்தையும் திருச்சி பிடித்தது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கோல்கத்தா ஆகிய 5 மெட்ரோ விமான நிலையங்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான பயணிகள் போக்குவரத்தில் திருச்சியை விட அதிக அளவில் பயணிகள் போக்குவரத்தை கையாண்டுள்ளன.

இந்நிலையில், திருச்சி-மலேசியா சேவையில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏர் ஏசியா, மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் சேவை அளிக்க முன்வந்துள்ளன.

அதன்படி, இன்று முதல் வாரத்துக்கு கூடுதலாக ஏர் ஏசியா 3 சேவை, மலிண்டோ 7 சேவை என மலேசியாவுக்கு 10 சேவைகளை இயக்க உள்ளன. இதன் மூலம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் திருச்சி முதலிடம் என்கிற (72 சேவைகள்) பெருமையை பெற்றுள்ளது.

கூடுதல் விமானச் சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்